செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 7 மே 2019 (11:11 IST)

காங்கிரஸ் ஆட்சியில்தான் 1 லட்சம் கோடித் திட்டங்களைப் பெற்றோம் – ராகுலுக்கு அனில் அம்பானி பதில் !

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் அனில் அம்பானியை சலுகை சார் முதலாளி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் பதிலடிக் கொடுத்துள்ளது.

ரஃபேல் போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து வாங்குவது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் விதிகளை மீறி பல சலுகைகளைப் பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இதனை மறுத்து ரிலையன்ஸ் குழுமம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘அதில் எங்கள் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானியை சலுகை சார் முதலாளி என்றும் நேரமையற்ற தொழிலதிபர் என்றும் களங்கும் விளைவிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசி வருகிறார். அவர் ரிலையன்ஸ் மீது வைக்கும் எந்த குற்றச்சாட்டும் உண்மை இல்லை. அவருடைய அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறோம்.

ராகுல் காந்திக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறோம். காங்கிரஸ் தலைமையிலான 2004-2104 ஆண்டுகால ஆட்சியில் நாங்கள் ஒரு லட்சம் கோடிக்கான திட்டங்களைப் பெற்றிருக்கிறோம். அப்படியெனில் நேர்மையற்ற தொழிலதிபரான அனில் அம்பானிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததா ? இதற்கு ராகுலின் பதில் என்ன ? ‘ எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.