செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 6 மே 2019 (11:41 IST)

பிரதமரைத் திருடன் என்கிறார் திருடன் மகன் – ராகுல் காந்தி மீது ஹெச் ராஜா குற்றச்சாட்டு !

ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் ராஜீவ் காந்தி ஊழல் செய்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ரஃபேல் போர் விமனங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகவும் அதில் மோடிக்குப் பங்கு இருப்பதாகவும் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அதனால் காவலாளி என சொல்லிக்கொள்ளும் பிரதமர் ஒரு திருடன் எனவும் பிரச்சாரம் செய்துவருகிறார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி ‘ராகுலின் தந்தை 1989-ல் ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் செய்தார்’ எனக் கூறினார். இதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸார்’ இறந்து போனவரைப் பற்றி அவதூறாகப் பேசிவது சரியானது அல்ல’ எனக் கூறிவருகின்றனர். காங்கிரஸாரின் இந்த மறுப்புக்கு ஹெச் ராஜா பதிலளித்துள்ளார்.

தனது டிவிட்டரில் ‘ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் ராஜிவ் ஊழல் செய்தார் என்பதால் தான் மக்கள் 1989ல் ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்தார்கள். ஒருவர் இறந்துவிட்டால் ஊழல் இல்லை என்றாகிவிடுவாமா? பிரதமரை ஒருவர் 10 மாதமாக திருடன் என்பார். ஆனால் நீ திருடன் மகன் என்று ஒருமுறை சொன்னால் தாங்கமுடியவில்லையா?’ எனத் தெரிவித்துள்ளார்.