புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 7 மே 2019 (08:59 IST)

நான் பிரதமரானால் …. – மாயாவதியின் புது டிவிஸ்ட் !

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் பிரதமர் ஆனால் அம்பேத்கர் தொகுதியில்தான் போட்டியிடுவேன் எனக் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் 5 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நேற்று நடைபெற்று முடிந்த வாக்குப்பதிவோடு இதுவரை 425 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளன. கருத்துக் கணிப்புகளின் படி இரு காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட இரு அணிகளுக்கும் பெரும்பாண்மை கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். இதற்காக  கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசியுள்ளார். மேலும் ஸ்டாலினையும் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த மூன்றாவது அணியில் மாயாவதி, மம்தா பானர்ஜி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று உ.பி மாநிலம் அம்பேத்கர் நகர் தொகுதியில் பேசிய மாயாவதி ‘ எல்லாம் சிறப்பாக நடந்தால் நான் இந்த அம்பேத்கர் நகர் தொகுதியில் போட்டியிடுவேன். நமோ நமோ என்பவர்களுக்கான காலம் முடிந்துவிட்டது. இனி வரப்போவது ஜெய் பீம்களின் காலம்’ எனக் கூறியுள்ளார். இதன் மூலம் தனது பிரதமர் எண்ணத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார் மாயாவதி.