புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (07:57 IST)

5,600 மீ உயரத்தில் சரிவு: உத்தராகண்ட் திடீர் வெள்ளத்திற்கு இதுவா காரணம்?

பனி சரிந்தே திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக இந்தியன் ரிமோட் சென்சிங் இன்ஸ்டிடியூட் சார்பில் உத்தராகண்ட் அரசிடம் அறிக்கை.

 
உத்தராகண்ட் திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக 5 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காணாமல் போன 170 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே திடீர் வெள்ளப் பெருக்குக்கு பனிச்சரிவே காரணம் என தெரியவந்துள்ளது.
 
திடீர் வெள்ளத்துக்கு பனிப்பாறை ஏரி வெடிப்பு காரணமாகக் கூறப்பட்டது. இதன் பின்னர் இதுதொடர்பாக ஆய்வுசெய்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், இந்தியன் ரிமோட் சென்சிங் இன்ஸ்டிடியூட், பனிச்சரிவு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளது. 
 
ரிஷி கங்கா நீர் பிடிப்பு பகுதியில் 5,600 மீட்டர் உயரத்தில் புதிதாக உருவான பனி சரிந்தே திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக இந்தியன் ரிமோட் சென்சிங் இன்ஸ்டிடியூட் சார்பில் உத்தராகண்ட் அரசிடம் அறிக்கை அளித்துள்ளது.