செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (10:42 IST)

ஷில்பா ஷெட்டியின் கணவர் கைதானது எப்படி?

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச படங்கள் தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்.  

 
பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவருமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் மும்பையில் நேற்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகள் மூலம் இவர் பணம் சம்பாதிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. 
 
ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச படங்கள் தயாரித்ததன் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருப்பது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் 3 பேர் தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக கூறி ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் தான் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.