நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது: ஆபாச படங்கள் தயாரித்ததாக குற்றச்சாட்டு!
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது: ஆபாச படங்கள் தயாரித்ததாக குற்றச்சாட்டு!
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச படங்கள் தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவருமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் மும்பையில் இன்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகள் மூலம் இவர் பணம் சம்பாதிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச படங்கள் தயாரித்ததன் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருப்பது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது