1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Re-approval of MPs Block Development Fund!

எம்பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மீண்டும் அனுமதி!

எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதி
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா  தொற்றுப் பரவியது.

இந்நிலையில், இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு  எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை  நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், மீண்டும் எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளதாவது:

2021- 22 ஆம் நிதி ஆண்டிற்கு தலா ரூ.2 கோடி ஒரே தவணையில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
About Writer
sinoj