செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (14:19 IST)

கோவேக்சின், கோவிஷீல்டுக்கு 96 நாடுகள் அங்கீகாரம்

கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை 96 நாடுகள் அங்கீகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

 
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.   
 
இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனா தடுப்பூசிகளாக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்தது மட்டுமல்லாமல், உலக அளவில் 96 நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார். 
 
மேலும் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ரஷ்யா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை அடங்கும் என குறிப்பிட்டுள்ளார்.