திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (12:45 IST)

இந்தியாவில் 54 சீன மொபைல் செயலிகளுக்கு தடை?

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மேலும் 54 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதிக்கவுள்ளது என தகவல். 

 
முன்னதாக கடந்த 2020 ஜூன் மாதம் டிக்டாக், யு.சி. பிரவுசர், ஷேர் இட், வீசாட் உள்ளிட்ட 59 பிரபலமான ஆப்கள் தடை செய்யப்பட்டன. 2020 நவம்பரில் 43 சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அப்படியாக மொத்தம் 224 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதிக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மேலும் 54 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதிக்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது என தெரிகிறது. 
 
இந்நிலையில் டை விதிக்கப்படவுள்ள மொபைல் ஆப்களில், Beauty Camera, Sweet Selfie HD, Beauty Camera – Selfie Camera, Equalizer & Bass Booster, CamCard for SalesForce Ent, Isoland 2: Ashes of Time Lite, Viva Video Editor, Tencent Xriver, Onmyoji Chess, Onmyoji Arena, AppLock, Dual Space Lite. ஆகியவை இடம்பெற்றுள்ளன.
 
தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 59-ன் கீழ் அவசர நிலையாக மத்திய அரசு இந்த ஆப்களை தடைசெய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.