ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2024 (10:08 IST)

ராமர் கோயில் பாதைகளில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான விளக்குகள் திருட்டு.. பக்தர்கள் அதிர்ச்சி..!

ramar temple
அயோத்தி உள்ள ராமர் செல்லும் பாதையில் போடப்பட்டு இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள்  திருடப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கடந்த ஜனவரி  மாதம் திறக்கப்பட்ட நிலையில் பிரதமர்  நரேந்திர  மோடி முதல் நாளில் பால ராமரை தரிசனம் செய்தார்.

இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு 6 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ராமர் கோவிலுக்கு செல்லும் பாதையில் போடப்பட்டு இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள் மற்றும் 3,800 மூங்கில் விளக்குகள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அயோத்தி  போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அயோத்தி வளர்ச்சி குழுமம் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த விளக்குகளை அமைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த விளக்குகள் திருடப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran