1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 ஜூலை 2024 (14:16 IST)

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

Theif Letter
தூத்துக்குடியில் வீடு புகுந்து திருடிய திருடன், அதை ஒரு மாதத்தில் திரும்ப கொடுத்து விடுவதாக மன்னிப்பு கடிதமும் எழுதி வைத்துவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரத்தை சேர்ந்தவர் சித்திரை செல்வி.ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் சமீபத்தில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன் பீரோவில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம், வெள்ளி, தங்க நகைகள் உள்ளிட்டவை திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீஸார் வீட்டில் வந்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது திருடன் தட்டு தடுமாறி தமிழில் எழுதி வைத்துவிட்டு சென்ற கடிதம் போலீஸ் கையில் சிக்கியுள்ளது.

அதில் திருடன் “என்னை மன்னித்து விடுங்கள். இன்னும் 1 மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன். என் வீட்டில் உடம்பு சரியில்லை. அதனால்தான்” என எழுதி உள்ளான். திருடனை பிடிக்க போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K