செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 12 நவம்பர் 2023 (07:59 IST)

சத்தீஷ்கர் மாநிலத்தில் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வரப்படும்: அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது என்பதும் முதல் கட்ட தேர்தல் கடந்த ஏழாம் தேதி முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட தேர்தல் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. 
 
இதனை அடுத்து அம்மாநிலத்தில் காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ராஜநாத்சிங், சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவரப்படும் என்று பேசினார். 
 
2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது என்றும் போதை பொருள் மனித கடத்தல் ஆகியவை அதிகரித்துள்ளதாகவும் மாநிலத்தில் மதமாற்றம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
 மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வருவோம் என தைரியமாக அமைச்சர் ராஜநாத்சிங், தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva