ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 11 நவம்பர் 2023 (21:56 IST)

தமிழகத்தில் பீக் அவர்ஸ் கட்டணம் குறைப்பு- பாஜக வரவேற்பு

தமிழக சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு, தமிழக பாஜக என்றும் துணை நிற்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், மின் கட்டண உயர்வையும், பீக் ஹவர் கட்டணத்தையும் உயர்த்தியிருந்தது அரசு. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று ''சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான  பீக் அவர்ஸ் நேர மின் கட்டணத்தை குறைக்கப்படுகிறது. தொழிற்சாலைகளில் மின் பயன்பாட்டை பொறுத்து 15% இருந்து 25% வரை பீக் அவர்ஸ் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது

இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:

''சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பெருமளவில் பாதிக்கும் வகையில் மின் கட்டண உயர்வையும், பீக் ஹவர் கட்டணத்தையும் உயர்த்தியிருந்தது திமுக அரசு. இதனைக் கண்டித்து தமிழகத் தொழில் நிறுவனங்கள் அறிவித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக்கோரி, என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது தொடர்ச்சியாக திமுக அரசை வலியுறுத்தினோம்.

தொழில் நிறுவனங்கள் மற்றும் தமிழக பாஜக கோரிக்கையை ஏற்று, பீக் ஹவர்ஸ் கட்டணத்தைக் குறைத்து இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை முழுவதுமாகத் திரும்பப் பெறுவதே தமிழக பாஜக கோரிக்கையாக இருந்தாலும், இந்த அரசாணையை அதன் முதல் படியாக ஏற்று வரவேற்கிறோம். தமிழக சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு, தமிழக பாஜக என்றும் துணை நிற்கும்'' என்று தெரிவித்துள்ளார்.