1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rajhya Sabha successfully register Farmer bill

கடும் எதிர்ப்பை மீறி விவசாய மசோதா தாக்கல்! – பரபரக்கும் மாநிலங்களவை!

National
எதிர்கட்சிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட விவசாய மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தக மற்றும் வணிக மசோதா, விலை உறுதிபாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்டதிருத்த மசோதாக்கள் எதிர் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களைவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவை எதிர்த்து அகாலிதள அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இன்று இந்த மசோதாக்கள் மாநிலங்களவை ஒப்புதலுக்கு வந்தது. இதை எதிர்த்து எதிர்கட்சியினர் பேசிய போதும் வெற்றிகரமாக மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் விவசாய மசோதாக்களை தாக்கல் செய்தார்.
அடுத்த கட்டுரையில்
இதுனால ஆபத்துதான்.. இல்ல ஆபத்தில்ல..! – குழப்பும் அதிமுக, குழம்பும் மக்கள்!