ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (10:32 IST)

தனி விமானத்தில் டிடிவி தினகரன் டெல்லி பயணம்: தமிழக அரசியலில் பரபரப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அதிமுக, திமுக கூட்டணியில் இந்த முறை பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் டிடிவி தினகரனின் நிலை என்ன என்பது குறித்த கேள்வி எழும்பியுள்ளது.
 
சசிகலா சிறையில் இருந்து ஜனவரி 27-ஆம் தேதி வெளியே வந்தவுடன் அதிமுகவை கைப்பற்றுவாரா? அல்லது அதிமுகவுக்கு மாற்றாக ஒரு கட்சியை உருவாக்குவாரா? என்பது குறித்த கேள்விக்கு இன்னும் பதில் இல்லை 
 
இந்த நிலையில் திடீரென இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தனி விமானத்தில் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் டெல்லியில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்புக்குப் பின் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்பட ஒருசில கட்சிகள் வெளியேற்றப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல கூட்டணியிலும் பாமக தேமுதிக மற்றும் பாஜக வெளியேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி பிரம்மாண்டமாக உருவாகும் என்றும் அந்த அணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், பாமக, தேமுதிக, மக்கள் நீதி மையம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பல கட்சிகள் இருக்கும் என்றும் இந்த புதிய அணி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது