2,999-க்கு ரீசார்ஜ் 3,000-த்துக்கு கூடுதல் பலன் – ஜியோ சூப்பர் ஆஃபர்!
ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்டு பயனர்களுக்கு சுதந்திர தின 2022 சலுகையை அறிவித்துள்ளது.
ஆம், ஜியோ சுதந்திர தின சலுகையின் கீழ் ரூ.2,999 மதிப்பிலான புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். இது ஜியோ வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டாவுடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. தினசரி டேட்டா பயன்பாட்டு வரம்பு தீர்ந்தவுடன், இணைய வேகம் 64kbps ஆக குறையும்.
இந்த புதிய திட்டத்தை ஜியோ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் ஜியோ பயனர்கள் தங்களின் ப்ரீபெய்ட் எண்ணை புதிய திட்டத்துடன் ரீசார்ஜ் செய்தால் ரூ.3,000 மதிப்புள்ள கூடுதல் நன்மைகளும் கிடைக்க உள்ளன. அவை பின்வருமாறு…
# JioTV, JioCinema, JioSecurity,
# 75 ஜிபி கூடுதல் டேட்டா
# 1 வருடம் Disney+ Hotstar மொபைல் சந்தா
# A ஜியோவிடமிருந்து ரூ.750 கூப்பன்
# நெட்மெட்ஸில் ரூ.750 தள்ளுபடி
# இக்ஸிகோவில் ரூ.750 தள்ளுபடி