1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (09:46 IST)

காஷ்மீரில் ஊடுறுவிய பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை! – பரபரப்பில் சுதந்திர தினம்!

Jammu-Kashmir
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் காஷ்மீரில் ஊடுறுவ முயன்ற இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்டு 15 அன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களும் தயாராகி வரும் நிலையில் காஷ்மீரில் சுதந்திர விழா ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்லன.

இந்நிலையில் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் என்ற இடத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் முகாம் அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்., அப்போது அப்பகுதி வழியாக இருவர் எல்லையை தாண்டி ஊடுறுவியுள்ளனர்.

அவர்களை நிற்க சொல்லி ராணுவத்தினர் தடுத்தபோது அவர்கள் துப்பாக்கியால் ராணுவத்தினரை நோக்கி சுடத் தொடங்கியுள்ளனர். இதனால் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இரு ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.