திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2022 (20:57 IST)

ஏப்ரல் 1 முதல் ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்! முதல்வர் அறிவிப்பு

cylinder
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார். 
 
இன்று ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்து கொண்டு பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அவர்கள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கும் உஜ்வாலா திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்
 
இந்த அறிவிப்பு ராஜஸ்தான் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சிலிண்டரின் விலை சுமார் 1,000 ரூபாய் என்று விற்று வரும் நிலையில் 500 ரூபாய்க்கு கிடைத்தது என்பது பெரும் வரப்பிரசாதம் என்று ராஜஸ்தான் மக்கள் தெரிவித்துள்ளனர்
 
இந்த முறையை தமிழ்நாடு உள்பட மற்ற அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது
 
Edited by Siva