திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 17 டிசம்பர் 2022 (17:34 IST)

ராகுல் காந்தி நாட்டிற்கே அவமானம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

rahul gandhi
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி நாட்டிற்கே அவமானம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா மீது படையெடுக்க சீனா தயாராகி வருகிறது என்று ராகுல்காந்தி கூறியதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ இதுகுறித்து கூறிய போது ராகுல் காந்தி இந்திய இராணுவத்தை மட்டுமின்றி நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து உள்ளார் என்றும் அவர் காங்கிரசுக்கு மட்டும் பிரச்சனையல்ல நாட்டிற்கே மிகப்பெரிய அவமானம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
இந்திய ராணுவத்தை நினைத்து மக்கள் பெருமைப் படுகின்றனர் என்றும் அவர் கூறினார். சீனா போருக்கு தயாராகி வரும் நிலையில் இந்தியா தூங்கிக் கொண்டிருக்கிறது என்றும் அச்சுறுத்தலை மத்திய அரசு தவிர்த்து வருவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்து குற்றச்சாட்டுக்கு மத்திய சட்ட அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran