1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2022 (18:54 IST)

இந்தி இனிமேல் உதவாது.. ஆங்கிலம் கற்று கொள்ளுங்கள்: ராகுல் காந்தி

rahul gandhi
இந்தி மொழி இனிமேல் உதவாது என்றும் எல்லோரும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டவர்களிடம் பேசும்போது இந்தி மொழி எந்த வகையிலும் உதவாது என்றும் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க படுவதை பாஜக தலைவர்கள் விரும்பவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் அவர்களின் பிள்ளைகள் ஆங்கில வழி கல்விக்கு செல்கிறார்கள் என்றும் உண்மையில் ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ராஜஸ்தானில் ராகுல் காந்தி பேசியுள்ளார்
 
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள் ஆங்கிலம் கற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran