ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 24 மே 2023 (11:08 IST)

டிவி, கிரைண்டர், மிக்ஸி, அயர்ன்பாக்ஸ் இருக்கக்கூடாது: 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு தகுதி..!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானது வீடுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்பது. ஆனால் தற்போது கர்நாடக துணை முதல்வர் இது குறித்து சில கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. 
 
அதன்படி ஏசி, ஃபேன், பிரிட்ஜ், டிவி, எல்இடி பல்புகள், வாஷிங் மெஷின், ஸ்மார்ட் போன், மிக்ஸி, கிரைண்ட,ர் அயன் பாக்ஸ், ஏர்கூலர் ஆகியவை இல்லாத வீடுகளுக்கு மட்டும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. 
 
மேற்கண்ட பொருட்கள் இல்லாத வீடு இருக்காது என்பதால் 200 யூனிட்டும் இலவச மின்சாரம் என்பது கிட்டத்தட்ட யாருக்குமே கிடைக்காது என்று கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை, இந்த தகவலை கர்நாடக மாநில அரசு உண்மையில் தெரிவித்துள்ளதா?  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran