திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 27 மே 2023 (21:10 IST)

மூதாட்டியை கொன்று அவரின் உடலை சாப்பிட்ட வாலிபர் கைது

ராஜஸ்தான் மாநிலத்தில் புல் அறுக்கச் சென்ற மூதாட்டியை கொன்று அவரின் உடலை சாப்பிட்ட வாலிபரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பளி மாவட்டம் செந்த்ரா  நகரில் அமைந்துள்ளது சாரதானா என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த  சாந்தி தேவி( 65). இவர் கடந்த வெள்ளிக்கிழமை தன் வீட்டில் உள்ள கால்நடைக்கு புல் அறுப்பதற்காக அருகிலுள்ள பகுதிக்குச் சென்றிருந்தார்.

அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் சாந்தி தேவியை கடுமையாகத் தாக்கி கல்லால் அடித்துக் கொன்றார். அதன்பின், அவரது உடலை அந்த வாலிபர் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த ஒரு பெண்ணின் உடலை வாலிபர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்த  அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கு மக்கள் வந்து வாலிபரை பிடிக்க சென்றபோது, அவர் தப்பியோட முயன்றார். அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் வாலிபரை கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸார் விசாரிக்கையில், அந்த வாலிபர் டெல்லியைச் சேர்ந்த சுரேந்திர தாகூர்(24). இவர் தெருநாய் நடித்து ரேபிஸ் பாதிப்புக்கு உள்ளாகி, உச்சமடைந்ததால், அவர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்குப் பின் அவரிடம் போலீஸார் விசாரிக்க உள்ளனர்.