கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம்: இன்று 24 அமைச்சர்கள் பதவியேற்பு.!
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது என்பதும் கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி கே சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று 24 அமைச்சர்கள் பதவி ஏற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு அமைச்சர்களின் பெயர்களும் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பதவி ஏற்கும் அமைச்சர்களின் விவரங்கள் இதோ:
எச்.கே.பாட்டீல், கிருஷ்ணபைரே கவுடா, என்.செலுவராயசாமி, கே.வெங்கடேஷ், எச்.சி.மகாதேவப்பா, ஈஷ்வர் கண்ட்ரே, கியாத்தசந்திர என்.ராஜண்ணா, தினேஷ் குண்டுராவ், சரணபசப்பா தர்சனாபூர், சிவானந்தா பாட்டீல், திம்மாப்பூர் ராமப்பா பாலப்பா, எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன், தங்கடகி சிவராஜ் சங்கப்பா ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
மேலும், சரணபிரகாஷ் ருத்ரப்பா பாட்டீல், மான்கால் வைத்யா, லட்சுமி ஆர்.ஹெப்பால்கள், ரகீம் கான், டி.சுதாகர், சந்தேஷ் எஸ்.லாட், என்.எஸ்.போஸ்ராஜூ, பி.எஸ்.சுரேஷ், மது பங்காரப்பா, எம்.சி.சுதாகர், பி.நாகேந்திரா ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
மேற்கண்ட 24 பேருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
Edited by Mahendran