1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 அக்டோபர் 2022 (17:58 IST)

காதலியுடன் இருந்ததை தட்டிக்கெட்ட மனைவி மீது காரை ஏற்றிய சினிமா தயாரிப்பாளர்!

car
காதலியுடன் இருந்ததை தட்டிக்கெட்ட மனைவி மீது காரை ஏற்றிய சினிமா தயாரிப்பாளர்!
காதலியுடன் இருந்ததை தட்டி கேட்ட மனைவியை காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சினிமா தயாரிப்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 
 
மும்பையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா என்பவர் காதலியுடன் இருந்ததை கண்டுபிடித்து அவரை அவரது மனைவி தட்டிக் கேட்டுள்ளார் 
 
இதனால் ஆத்திரமடைந்த கமல் கிஷோர் வீட்டின் கார் பார்க்கிங்கில் மனைவி மீது காரை ஏற்றி விட்டு தப்பி சென்று விட்டார். கமல் கிஷோர் மனைவி கால்கள் மற்றும் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 
 
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருக்கும் கமல் கிஷோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
 
Edited by Mahendran