வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (11:11 IST)

காங்கிரஸ் தலைவர் ஆகும் அசோக் பைலட்: ராஜஸ்தான் முதல்வர் யார்?

ashok kelot
காங்கிரஸ் தலைவர் ஆகும் அசோக் பைலட்: ராஜஸ்தான் முதல்வர் யார்?
தற்போது ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக இருக்கும் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதை அடுத்து ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு புதிய நபரை தேர்வு செய்ய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் சோனியா காந்தியின் ஆதரவு பெற்ற ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார் 
 
அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஒருவேளை சசிதரூர் போட்டியிட்டாலும் அசோக் கெலாட் தான் வெற்றி பெறுவார் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவராக அசோக் கெலாட் போட்டியிடுவதை அடுத்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்ய ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
 
ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட்டை முதல்வராக்குவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை செய்து கொள்வது அவர் முதல்வர் பதவியை ஏற்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.