1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rajastan MLA dead for corona virus,

கொரோனாவுக்கு பலியான பெண் எம்.எல்.ஏ: அதிர்ச்சி தகவல்!

கொரோனா
கொரோனாவுக்கு பலியான பெண் எம்.எல்.ஏ: அதிர்ச்சி தகவல்!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக வேகமாக கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பரவி வந்தாலும் கடந்த இரண்டு மாதங்களாக ஓரளவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
 
இருப்பினும் கொரோனா வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மரணமடையும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் எம்பிக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் அவர்களில் சிலர் உயிரிழந்து வருகின்றனர் என்ற செய்தியையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக கட்சியைச் சேர்ந்த பாஜகவின் பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி என்பவர் டந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்
 
நேற்று இரவு எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி உயிரிழந்ததாக மருத்துவமனை உறுதி செய்துள்ளதை அடுத்து பிரதமர் மோடி, மக்களவை தலைவர் ஓம் பிர்லா, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் கிரண் மகேஸ்வரி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்பனை ! நீதிமன்றம்