வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (10:34 IST)

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் டிக்கெட் கட்டாயமா? – ரயில்வே விளக்கம்!

Train
ரயில்களில் 1 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என வெளியான தகவல் குறித்து ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

இந்திய ரயில்வேயின் எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் முன்பதிவு வசதி உள்ள நிலையில் பலரும் முன்பதிவு மூலம் படுக்கை வசதிக் கொண்ட பெட்டிகள், ஏசியுடன் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் போன்றவற்றில் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

முன்பதிவு இல்லாத மற்றும் முன்பதிவு உள்ள பெட்டிகள் அனைத்திலும் 1 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் கிடையாது என்ற நிலையே இருந்து வருகிறது. இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் முன்பதிவு அவசியம் என வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே “முன்பதிவு படுக்கை வசதி பெட்டிகளில் 1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் பயணிக்க கட்டணம் ஏதும் இல்லை. அவர்களுக்கு தனி படுக்கை வேண்டும் பட்சத்தில் ஒரு நபருக்கான படுக்கை வசதிக்கு எவ்வளவு கட்டணமோ அதை செலுத்தி தனி படுக்கை வசதி பெற்றுக் கொள்ளலாம். மற்றபடி பெற்றோருடன் உடன் பயணிக்க எந்த கட்டணமும் இல்லை” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.