புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2019 (10:59 IST)

முதல்வரின் உறவினர் வீட்டி ரெய்டு: கட்டுகட்டாக 6 கோடி ரூபாய் பறிமுதல்

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் உறவினர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையின் சோதனையில் கட்டுகட்டாக 6 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை ஒட்டி, நாடெங்கிலும் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேலையில் வருமான வரித்துறையினர் அமைச்சர்கள், அவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
அப்படி கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது சுமார் 6 கோடி பணம், 4 கோடி மதிப்பிலான நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.