வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (13:48 IST)

ஆபாச வீடியோக்களை அனுப்பிய முன்னாள் முதல்வரின் மனைவி? உதவியாளர் பகீர் புகார்!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மனைவி மீது அவரது உதவியாளர் பாலியல் புகார் அளித்ததாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான மறைந்த என்.டி.ராமராவின் மனைவி லட்சுமி மீது அவரது உதவியாளர் காவல் நிலையத்தில் ஒரு பகீர் புகாரை அளித்துள்ளார்.
 
அவர் அளித்துள்ள புகாரில் நான் லட்சுமியை எனது தாய் போல கருதினேன். ஆனால் அவர் என்னிடம் ஐலவ்யூ என கூறினார். வாட்ஸ் அப்பில் ஆபாசமான வீடியோக்களையும் மெசேஜ்களையும் அனுப்புகிறார். நாளுக்கு நாள் அவரது தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த 5 வருடமாக என்னை டார்ச்சர் செய்து வருகிறார்.
என்னை அட்ஜெஸ்ட் செய்தால் கட்சியில் பதவி வாங்கித் தருவதாக கூறினார். அவரது ஆசைக்கு நான் ஒத்துக்கொள்ளாததால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவர் புகார் அளித்துள்ளதால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அதேபோல்  5 வருடமாக தன்னை டார்ச்சர் செய்துவருகிறார் என கூறும் உதவியாளர் இதுநாள் வரை ஏன் அமைதியாக இருந்தார்? இது தேர்தல் நாடகமா என்ற சந்தேகமும் எழுகிறது.