ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2019 (08:52 IST)

முதல்வர் பழனிச்சாமியின் குலதெய்வ கோவிலில் கொள்ளை முயற்சி: பெரும் பரபரப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் குலதெய்வ கோவில் ஈரோடு அருகே நசியனூரில் உள்ளது. அப்பத்தாள் கோவில் என்று அழைக்கப்படும் இந்த கோவில் அந்த பகுதியில் பெரும் புகழ் பெற்றது
 
இந்த நிலையில் நசியனூர் அப்பத்தா கோவிலில் கடந்த 8 மாதங்களுக்கு முன் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இந்த கோவிலில் இருந்த விலை மதிப்புள்ள நகைகளும் பணமும் கொள்ளை போனது. முதல்வரின் குலதெய்வ கோவிலாக இருந்தும், கொள்ளை நடந்து எட்டு மாதங்கள் ஆகியும் இன்னும் கொள்ளையர் குறித்து ஒரு துப்பும் துலங்காததால் போலீசார் சிக்கலில் உள்ளனர்.
 
இந்த நிலையில் நேற்று மீண்டும் இதே கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதால் பெரும் பரபர்ப்பு ஏற்பட்டுள்ளது. நசியனூர் அப்பத்தாள் கோவிலின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் திடீரென கொள்ளை முயற்சியை கைவிட்டு அவர்கள் மாயமாய் மறைந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கொள்ளை முயற்சி குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.