ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (07:48 IST)

பீகாரில் இன்று நுழைகிறது ராகுல் காந்தியின் யாத்திரை.. நிதிஷ்குமார் குறித்து விமர்சிப்பாரா?

பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று அம்மாநிலத்தில்  ராகுல் காந்தியின் யாத்திரை நுழைகிறது. பீகாரில் நுழைந்ததும் அவர் நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் பாரத் ஜடோ நியாய  யாத்திரையை முடித்த ராகுல் காந்தி இன்று பீகார் மாநிலத்தில்  நுழைகிறார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ள நிலையில்  யாத்திரையில் ராகுல் காந்தி என்ன பேசுவார் என்ற  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த நிதிஷ்குமார் சமீபத்தில்  பாஜகவில் ஐக்கியமான நிலையில் ராகுல் காந்தியின் பதிலடி எப்படி இருக்கும்? அல்லது அடக்கி வாசிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நிதிஷ்குமாரின் அணி மாற்றத்தை பீகாரிலுள்ள அரசியல் தலைவர்களான தேஜஸ்ரீ யாதவ், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் ராகுல் காந்தியும் கடுமையாக விமர்சனம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva