வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (15:11 IST)

அமெரிக்காவில் காயம் அடைந்த ஹரியான இளைஞர்.. ராகுல் காந்தி செய்தது என்ன தெரியுமா?

Rahul Gandhi
சமீபத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றிருந்த போது, அங்கு விபத்தில் காயம் அடைந்த ஹரியானா மாநில இளைஞரை சந்தித்தார். அப்போது, அந்த இளைஞரிடம், "உங்கள் வீட்டிற்கு சென்று உங்கள் தாயை சந்திப்பேன்" என உறுதி அளித்தார்.

இந்த நிலையில், இந்தியா திரும்பிய ராகுல் காந்தி இன்று காலை 6 மணியளவில் திடீரென விபத்தில் காயமடைந்த அமித் குமார் என்பவரின் குடும்பத்தினரை அவர்களது வீட்டில் சென்று சந்தித்தார். இதனை எதிர்பார்க்காத அமித் குமார் குடும்பத்தினர் ஆச்சரியமடைந்தனர்.

இது குறித்து அமித் குமார் தாயார் கூறியதாவது, "அமெரிக்காவில் எங்கள் மகன் விபத்தில் காயம் அடைந்ததை ராகுல் காந்தி சென்று பார்த்தார். அவரிடம் 'உங்கள் தாயை சென்று பார்ப்பேன்' என்று வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இன்று எங்கள் வீட்டிற்கு வந்தார். ராகுல் காந்தி எங்கள் வீட்டிற்கு வருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை’ என்று கூறினார்.

இந்த நிலையில், ஹரியானாவில் அக்டோபர் 5 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், ராகுல் காந்தி அரசியல் ஸ்டண்ட் செய்து வருகிறார் என்று பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Edited by Siva