1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 1 மே 2019 (08:50 IST)

ரகசிய கோப்புகளை எரித்தாலும் மோடி தப்ப முடியாது: ராகுல்காந்தி

நேற்று டெல்லி சாஸ்திரி பவனின் தீவிபத்து ஏற்பட்டு ஏராளமான முக்கிய ஆவணங்கள் தீயில் கருகியதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி சாஸ்திரி பவனில்  உள்ள அரசின் ரகசிய கோப்புகளை தீ வைத்து எரித்தாலும் மோடி தப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியின் இந்த சர்ச்சை கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஒவ்வொரு முறை சாஸ்திரி பவனின் தீவிபத்து ஏற்படும்போதெல்லாம் ஆளும்கட்சி முக்கிய ஆவணங்களை அழிக்கவே தீ விபத்தை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்புவதுண்டு. அந்த வகையில் நேற்று ️டெல்லி சாஸ்திரி பவனில் நடந்த தீ விபத்து குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் கருத்து கூறியபோது, 'அரசின் ரகசிய கோப்புகளை தீ வைத்து எரித்தாலும் மோடி தப்ப முடியாது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
 
ஆனால் இதேபோல் கடந்த 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்க சில நாட்களுக்கு முன்பும் சாஸ்திரி பவனின் தீவிபத்து ஏற்பட்டது என்பதை பாஜகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 2006, 2008 மற்றும் 2012ஆம் ஆண்டுகளிலும் சாஸ்திரி பவனில் தீவிபத்து ஏற்பட்டதாகவும், அப்போதெல்லாம் ராகுல்காந்தி ஏன் டுவீட் பதிவு செய்யவில்லை என்றும் பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்