வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2024 (15:14 IST)

அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் ஏஜென்ட் தான் ராகுல் காந்தி: பாஜக பிரமுகர் ரவிசங்கர்..

அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் என்பவரின் ஏஜென்டாக ராகுல் காந்தி செயல்படுகிறார் என்றும்,  பிரதமர் மோடி மீதான வெறுப்பால் இந்தியாவுக்கு எதிராக ராகுல் செயல்படுகிறார் என்றும், அரசியல் ஆதாயத்துக்காக சொந்த நாட்டின் நலனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்றும் பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இன்று அளித்த பேட்டியில் ரவிசங்கர் மேலும் கூறியபோது, ‘அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் என்பவர் இந்தியாவுக்கு எதிரானவர், அவர் நம் நாடு குறித்து அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு அவர் தான் நிதியுதவி வழங்குகிறார். அவரது தூண்டுதலின் பேரில் ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் அவருடைய ஏஜென்டாக ராகுல் காந்தி செயல்படுகிறார் என்று கூறினார்.

அமெரிக்காவில் ஒரு அறக்கட்டளை நடத்தி வரும் ஜார்ஜ் சோரஸ், பல்வேறு நாடுகளின் அரசியலில் திரைமறைவாக செயல்பட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும், அதற்காக அவர் ரூ.12,000 கோடி வரை செலவிடுவதாகவும், குறிப்பாக இந்தியா உட்பட 120 நாடுகளின் அரசியலில் தலையிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் வங்கதேச அரசியல் மாற்றத்திற்கும் இவர்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

Edited by Siva