வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By anandakumar
Last Modified: செவ்வாய், 26 ஜனவரி 2021 (00:01 IST)

செம்மறி ஆடுகளை போல விவசாயிகளையும் பட்டியில் போட்டு கிளாஸ் எடுத்த ராகுல்காந்தி

கரூரில் வாயில்லா ஜீவன்களை கொடுமைப்படுத்திய காங்கிரஸ் எம்.பி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரால் பரபரப்பு – புளுகிராஸில் புகார் எழும்புமா ? ராகுலும், எம்.பி மட்டுமே கொரோனா விழிப்புணர்வு பின்பற்றிய நிலையில் காற்றில் பறக்க விட்ட கொரோனா விழிப்புணர்வும் சமூக இடைவெளியும்
 
செம்மறி ஆடுகளை போல விவசாயிகளையும் பட்டியில் போட்டு கிளாஸ் எடுத்த ராகுல்காந்தியின் செயலால் பரபரப்பு
 
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் இரண்டாவது முறையாக தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்றாவது நாளாக கரூருக்கு இன்று மதியம் 12 மணியளவில் வந்தார். 

இந்நிலையில், கரூரில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டதோடு, கரூர் அடுத்த வாங்கல் பகுதியில் மாரிக்கவுண்டன்பாளையத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் முன்னேற்பாடாக விவசாயிகளையும், ஊடகத்தினையும் கவரும் வகையில் மாட்டுவண்டியில் நின்று கொண்டு ராகுல் செல்ல திட்டம் தீட்டப்பட்டிருந்தது. அதே போல, இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் துப்பாக்கியுடன் பாதுகாவலர்கள் படை சூழ, ராகுல் மாட்டுவண்டியில் நின்றபடி செல்ல, மாடுகள் மிரண்டது. மேலும், மாட்டு வண்டியினை கரூர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி ஒட்டியதும் மாடு மிகுந்த அளவில் மிரண்ட நிலையில் அந்த மாட்டு வண்டியில் சுமார் 10 க்கும் மேற்பட்டோர் ஏறியதால் மாடு மிரண்டதோடு, இழுக்க முடியாமல் இழுத்தது அப்போது மாட்டின் உரிமையாளர் மூக்கணாங்கயிற்றினை மிகுந்த அழுத்தத்தில் இழுத்து அவர்களை அனைவரையும் இழுப்பதற்கு மாடுகளை துன்புறுத்தினார்.

இந்நிலையில், புளு கிராஸ் மெம்பர்கள் மற்றும் பீட்டா அமைப்பினரின் புகாருக்கு காங்கிரஸ் கட்சியின் எம்.பி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பெயர்கள் சென்றுள்ளதால் புகார் எழும்புமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், கொரோனா கட்டுப்பாடுகள் உள்ள நம் தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, கரூர் எம்.பி ஜோதிமணி பாதுகாவலர்கள் மட்டுமே முக கவசம் அணிந்திருந்தனர். மற்றவர்கள் யாரும் அதாவது கட்சி நிர்வாகிகளும், பொதுமக்கள் மற்றும் உழவர்களுக்கு மாஸ்க் வழங்க வில்லை., மேலும், ராகுல் ஆங்கிலத்தில் பேச, அது புரியாதவர்கள் பலர் தூக்கத்தில் உறங்கினர்.

அதுமட்டுமில்லாமல், செம்மறி ஆட்டு பட்டியில் எப்படி ஆடுகளை போட்டு அடைத்து விடுவார்களோ, அதே போல ராகுல்காந்தி பங்கேற்ற கூட்டமும் அப்படியே இருந்ததால், கம்பி வேலியினை முதியவர்கள் தாண்டி குதித்து வெளியேறினர். ஒரு சில பெண்கள் வெளியேறும் போது, இருங்கள் ராகுல் பேசிய பிறகு போலாம் என்று கூறிய காட்சிகளும் தற்போது வைரலாகி வருகின்றது. மேலும், ராகுல் பேச்சினை முடித்து விட்டு கிளம்பிய நிலையில், அடைத்து வைக்கப்பட்ட மக்கள் அப்படியே வெளியேற்றப்பட்டார்கள். அதில் ஒரு சிலர் விவசாயிகளுக்காக செட்டப் செய்திருந்த மண்பானைகளும், வாழைத்தார்களையும் எடுத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்ற காட்சிகளும் தற்போது வைரலாகி வருகின்றது