வயநாடு தொகுதிக்கு பொம்மை எம்.பி. தேவையில்லை: பா.ஜ.க. வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ்
வயநாடு தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரி பிரியங்கா காந்தி ஜெயித்தாலும், நான் அதிகாரபூர்வமற்ற எம்பியாக இருப்பேன் என்றும், அதனால் வயநாடு தொகுதிக்கு இரண்டு எம்பிகள் இருப்பார்கள் என்றும் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
அவரது இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள வயநாடு பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், "வயநாடு தொகுதிக்கு இரண்டு பிரதிநிதிகள் தேவை இல்லை, மற்றும் ஒருவர் பொம்மையாக இருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வயநாடு தொகுதிக்கு ராகுல் காந்தி எதுவும் செய்யவில்லை என்றும், காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வயநாடு பகுதிக்கு சுற்றுலா பயணிகளைப் போல அவ்வப்போது வந்து சென்று கொண்டிருக்கின்றனர் என்றும், வயநாடு பகுதிக்கு எப்போதும் மக்களுடன் இருக்கும் ஒரு எம்பி தான் தேவை என்றும் பொம்மை எம்பி தேவை இல்லை" என்றும் அவர் கூறினார்.
வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட போது, பிரதமர் மோடி நேரில் வந்து மீட்புப் பணிகளை கண்காணித்தார் என்றும், ஆனால் ராகுல் காந்தியோ, பிரியங்கா காந்தியோ அல்லது கேரளா அரசோ எந்தவித உதவியும் வழங்கவில்லை" என்றும் தெரிவித்தார்.