வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 22 அக்டோபர் 2024 (17:50 IST)

வயநாட்டிற்கு பிரியங்காவை விட சிறந்த எம்பியை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது: ராகுல் காந்தி

வயநாடு தொகுதிக்கு எனது சகோதரி பிரியங்காவை தவிர வேறு ஒரு சிறந்த எம்.பி. ஐ கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நவம்பர் 13ஆம் தேதி வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் நாளை அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் "வயநாடு மக்களுக்கு என் இதயத்தில் சிறந்த இடம் வைத்துள்ளேன். அந்த தொகுதிக்கு என்னுடைய சகோதரியை தவிர சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்ய முடியாது. அவர் நாடாளுமன்றத்தில் வயநாட்டில் குரலாக உழைப்பார் என்று நான் நிச்சயம் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "வயநாடு தொகுதி மக்கள் தனது சகோதரியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த எக்ஸ் பதிவில் தற்போது இணையத்தில் வருகிறது.


Edited by Siva