வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (17:25 IST)

காங்கிரஸ் தலைவர் பதவி ட்விட்டரில் கூட இருக்க கூடாது – நீக்கிய ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி பதிவி விலக இருக்கும் நிலையில் தனது ட்விட்டரில் இருந்து தனது பதவியை நீக்கியுள்ளார்.

மக்களவை தேர்தலின் தோல்வியை அடுத்து தான் பதவி விலகுவதில் உறுதியோடு இருக்கிறார் ராகுல் காந்தி. இதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டியிடம் மனுவையும் அளித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் அவரை ராஜினாமா செய்யும் முன் வேறொரு தலைவரை தேர்ந்தெடுக்கும் முனைப்பில் இருக்கிறது.

இந்நிலையில் ராஜினாமா குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி, தனது சுயவிவர பட்டியலில் உள்ள “காங்கிரஸ் தலைவர்” என்னும் பதவியையும் நீக்கியுள்ளார். அதற்கு பதிலாக இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினர் என்று பதிவிட்டுள்ளார்.