வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 ஜூலை 2019 (16:51 IST)

காங். இடைக்கால தலைவர் 90 வயது மோதிலால் வோரா?

காங்கிரஸ் தலைவர் ராகுல் தனது ராஜினாமா முடிவில் உறுதியாக உள்ளதால் காங்கிரஸ் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 
 
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜகவிடம் படு்தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடித்தார். ஆனால், ராகுலில்ன் ராஜினாமா ஏற்கப்படவில்லை. 
 
ஆனால், ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவில் பின்வாங்குவதாய் இல்லை. தர்போது தனது ராஜினாமா குறித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டார். அதில், மக்களவைத் தேர்தலில் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். 
காங்கிரஸ் கட்சியை சீரமைக்கக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு பலரை பொறுப்பாக்க வேண்டியுள்ளது. கட்சியின் அடுத்த தலைவரை நான் தேர்வு செய்வது சரியாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
 
எனவே, காங்கிரஸ் கட்சியின் தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் கட்சி உள்ளது. அதன்படி, காங்கிரஸ் இடைக்கால தலைவராக 90 வயது மோதிலால் வோரா நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மோதிலால் வோரா மத்திய அமைச்சர், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.