வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 8 பிப்ரவரி 2023 (19:16 IST)

அதானி இதையெல்லாம் இலவசமாக செய்கிறாரா? ராகுல் காந்தி ஆவேசம்..!

rahul
அதானி இதையெல்லாம் இலவசமாக தான் செய்கிறாரா? இது தேசிய பாதுகாப்பு பிரச்சனை, இது குறித்து அரசுக்கு எப்படி தெரியாமல் இருந்திருக்க முடியும்? என ராகுல் காந்தி ஆவேசமாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
இன்று ராகுல் காந்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அதானி மற்றும் மோடி ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இது குறித்து கேள்வி அனுப்பிய ராகுல் காந்தி நான் கேட்பதெல்லாம் மிகவும் எளிய கேள்விகள், பிரதமரே உங்கள் வெளிநாட்டு பயணங்களின் போது எத்தனை முறை அதானி உடன் நீங்கள் பயணம் செய்தீர்கள்? எத்தனை முறை அதானி நீங்கள் சென்ற பிறகு உங்களுடன் இணைந்து கொண்டார்? ஒரு நாட்டிற்கு நீங்கள் பயணம் சென்று வந்த உடனேயே அவர் அந்த நாட்டிற்கு ஏற்ற எத்தனை முறை சென்று வந்தார்?
 
இந்த நாடுகளில் நீங்கள் சென்று வந்த பிறகு எத்தனை முறை அதானிக்கு ஒப்பந்தம் கிடைத்தது? மேலும் ஒரு முக்கியமான கேள்வி கடந்த 20 ஆண்டுகளில் எவ்வளவு பணம் அதானியால் பாஜகவுக்கு கொடுக்கப்பட்டது ?அவர் தேர்தல் பத்திரங்களின் மூலம் எவ்வளவு கொடுத்துள்ளார்? மொரிசியசை தளமாக கொண்டிருக்கும் இந்த ஷெல் நிறுவனங்கள் யாருக்கு சொந்தமானவை? இந்த ஷெல் நிறுவனங்கள் இந்தியாவிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அனுப்பி இருக்கின்றன, அது யாருடைய பணம்? அதானி இலவசமாக இதையெல்லாம் செய்கிறாரா? இது தேசிய பாதுகாப்பு பிரச்சனை, இது குறித்து அரசுக்கு எப்படி தெரியாமல் இருக்க முடியும்? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளார்
 
Edited by Siva