வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (11:34 IST)

4வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்.. இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

Parliament
அதானி விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் நான்காவது நாளாக இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதானி விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என எதிர்கட்சி எம்பிகள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புக்கொள்ள அளிக்கவில்லை என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்து வருகின்றன. 
 
இந்த நிலையில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியதால் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva