திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : புதன், 8 பிப்ரவரி 2023 (10:29 IST)

அதானி விவகாரம் சீரானதால் உயரும் பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் நிம்மதி..!

sensex
அதானி விவகாரம் காரணமாக கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிந்த நிலையில் நேற்று அதானி திடீரென தனது நிறுவனங்களின் கடன்களை முன்கூட்டியே முடிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். 
 
இதனை அடுத்து அவருடைய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. இந்த நிலையில் அதானியின் இந்த முடிவு காரணமாக இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்து உள்ளது 
 
இன்று காலை பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் சுமார் 400 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து 60 ஆயிரத்து 680 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 125 புள்ளிகள் வியந்து 17, 850 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதானி விவகாரம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதால் இனி பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்படும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Siva