வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 1 ஜனவரி 2023 (09:16 IST)

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் பிரச்சினை இல்லை: நிதிஷ் குமார்

rahul gandhi
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை என பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
 
 ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட ஒருசிலர் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் ஏற்றுக்கொண்டதை அடுத்து எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது
 
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் வேட்பாளராக அவரை மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva