அடுத்த 24 மணிநேரம் முக்கியமானது – ராகுல் எச்சரிக்கை !

Last Updated: புதன், 22 மே 2019 (16:13 IST)
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒரு ட்வீட் மூலம் எச்சரிக்கை செய்துள்ளார்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவுக்குப் பின்னர் தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது எக்சிட்போல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.  இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் பெரும்பாலும் பாஜகவுக்கு சாதகமாகவே வெளியாகியுள்ளன.
 
ஆனால் இதைக் காங்கிரஸ் ஏற்க மறுத்துள்ளது. மேலும் ஆளும்கட்சியினர் வாக்கு எந்திரங்களில் மோசடி செய்துள்ளதாகவும் புகார் அளித்துள்ளனர். கருத்துக் கணிப்பு முடிவுகளால் தொண்டர்கள் சோர்ந்துவிடக் கூடாது என்பதற்காக  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொண்டர்களுக்கு டிவிட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில்  ‘அடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமானது; விழிப்புடன் இருங்கள், கண்காணியுங்கள் நீங்கள் உண்மைக்காக போராடுகிறீர்கள்; கருத்துக்கணிப்பு முடிவுகளால் மனம் உடைந்து விடாதீர்கள் காங்கிரஸ் மீதும் உங்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள் ’ என எச்சரிக்கை செய்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :