திமுகவுக்கே அதிக வாய்ப்பு – வெளியானது அடுத்த கருத்துக்கணிப்பு !

Last Modified புதன், 22 மே 2019 (11:32 IST)
தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பான இந்து நாளிதழின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. அதையடுத்து மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.  இப்போது இந்த இடைத்தேர்தல்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் நடத்தி வெளியிட்ட கருத்துக்கணிப்பில் திமுகவுக்கு 14 இடங்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து இப்போது இந்து நாளிதழ் தாங்கள் நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் இந்திய அளவில் பாஜக கூட்டணிக்கு 42 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 30 சதவீத வாக்குகளே கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது.

அதேப்போல தமிழக அளவில் திமுக கூட்டணிக் கட்சிகள் அதிகபட்சமாக 47 சதவீத வாக்குகளைக் கைப்பற்றும் எனவும் அதிமுக 35 % மற்றும் அமமுக 9 % வாக்குகளைக் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :