வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 22 மே 2019 (11:05 IST)

திமுக கூட்டணியில் இருந்து விலகும் காங்கிரஸ்: அழகிரி பெயரில் வெளியான பரபர அறிக்கை!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக கே.எஸ். அழகிரி பெயரில் வெளியான அறிக்கை போலி என தெரியவந்துள்ளது. 
நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகயுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக கே.எஸ் அழகிரி பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. 
 
கருத்துகணிப்புகளில் பாஜக வெற்றி பெறும் என கூறப்பட்ட நிலையில், மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதற்கு நீங்கள் ஒத்துழைப்பீர்களா என ஸ்டாலினிடம் கேட்கப்பட்டதும் அவர் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் இது குறித்து பதில் அளிக்கிறேன் என கூறிய நிலையில் இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. 
இந்நிலையில் இது போலியான அறிக்கை என காங்கிரஸ் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இது குறித்து டிவிட்டர் பக்கத்தில், தலைவர் திரு. @KS_Alagiri அவர்கள் பெயரில் #போலியான_அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது.  
 
இந்த அறிக்கையை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டு கொள்கிறோம். இதை போன்ற போலி செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம் என பதிவிடப்பட்டுள்ளது.