குடியரசு தினவிழா - தேசியக்கொடி ஏற்றிய ஜனாதிபதி
குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் 70 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பல்வேறு அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். அவருடன் மோடி, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் இருந்தனர். தற்பொழுது சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.