ஆசிரியர்கள் இல்லாமல் நடக்குமா குடியரசு தினவிழா ? –கலையிழந்த பள்ளிகள் !
ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நாளைப் பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்படுமா என்ற அச்சம் உருவாகியுள்ளது.
வருடம்தோறும் பள்ளிகளில் சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரண்டு நாட்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்படும். அதன் பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் வழக்கம். இதில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளோடு கொண்டாடி மகிழ்வர்.
ஆனால் இந்த அண்டு ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும்பாலான பள்ளிகள் கடந்த 4 நாட்களாக இயங்காமல் உள்ளன. இதனால் பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடுவதற்கான முன்னேற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை. அதனால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் இந்த ஆண்டு குடியரசு தினவிழாக் கொண்டாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.