1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 7 மே 2024 (09:53 IST)

ராகுல் காந்தி யாத்திரையின்போது மதுபானம் கொடுத்தார்கள்.. காங்கிரஸ் கட்சியின் ராதிகா அதிர்ச்சி தகவல்..!

ராகுல் காந்தியின் பாதை யாத்திரையின் போது மதுபானம் கொடுத்தார்கள் என்றும் அப்போதும் மதுபோதையில் இருந்த சில கட்சி நிர்வாகிகள் தன்னுடைய அறையை தட்டி தொல்லை கொடுத்தார்கள் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த ராதிகா என்பவர் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராதிகா கட்சியிலிருந்து விலகிய நிலையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராகுல் காந்தியின் பாதயாத்திரையின்போது சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் எனக்கு மதுபானம் கொடுத்தார் என்றும் அது மட்டும் இன்றி மது போதையில் இருந்த அவர் கட்சி நிர்வாகிகளுடன் வந்து என்னுடைய அறையை தட்டினார் என்றும் கூறினார்
 
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் புகார் செய்தேன் என்றும் ஆனால் எந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன் தான் ராமர் கோவிலுக்கு சென்றதாகவும் அது குறித்த புகைப்படத்தை எனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த போது அதற்கு காங்கிரஸ் கட்சியினர் என்னை திட்டியதாகவும், ராமர் கோவிலுக்கு சென்றது தவறா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
 தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஏன் ராமர் கோயிலுக்கு செல்கிறீர்கள் என்னை என்று என்னை கேள்வி எழுப்பினார்கள் என்றும் அதனால் நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva