புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 6 மே 2024 (09:16 IST)

சீட் கிடைக்காத அதிருப்தி. மீண்டும் அதிமுகவுக்கு செல்கிறாரா திருநாவுக்கரசர்?

Thirunavukarasu
நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசர் அவர்களுக்கு திருச்சி தொகுதி வழங்கப்படவில்லை என்பதும் அந்த தொகுதி மதிமுகவுக்கு அளிக்கப்பட்டது அடுத்து வைகோ மகன் துரைவைகோ அந்த தொகுதியில் போட்டியிட்டார் என்பதும் தெரிந்தது 
 
இந்த நிலையில் தனக்கு சீட்டு வழங்காததால் கடும் அதிருப்தியில் இருக்கும் திருநாவுக்கரசர் பாஜகவுக்கு தாவப் போகிறார் என்ற வதந்தி வந்த நிலையில் அந்த தகவலை அவரை மறுத்துவிட்டார் 
 
இந்த நிலையில் அண்ணா திமுகவுக்கு வாருங்கள் இங்கே உங்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் சுவிஜயபாஸ்கர் திருநாவுக்கரசருக்கு தூதுவிட்டு இருப்பதாகவும் இந்த தூது காரணமாக திருநாவுக்கரசர் தரப்பு சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது 
 
அதிமுகவுக்கு சென்றால் முன்பிருந்த மரியாதை நமக்கு கிடைக்குமா என்று அவர் தனது ஆதரவாளர்களிடம் தீவிர ஆலோசனையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் கட்சி மாறும் அறிவிப்பு வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva